கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை... கல்யாண வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கதறிய மாப்பிள்ளை
புவனேஸ்வர்: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் புதுமண பெண் மாரடைப்பால் இறந்தததால், திருமண நிகழ்ச்சி துக்க நிகழ்ச்சியாக மாறியது.
தாயை பிரிந்து மாமியார் வீட்டிற்கு செல்ல மனம் இன்றி மனம் உடைந்து அழுததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒடிசாவின் சோனேப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் முடிந்த பின் ஒவ்வொரு பெண்ணும் பாசமாக வளர்த்த பெற்றோரை பிரிய மனம் இல்மல் அழுவார்கள். ஆனந்த கண்ணீருடன் துக்கமும் பலருக்கு தொண்டையை அடைக்கும். அப்படித்தான் ஒடிசாவின் சோனேப்பூரில் நடந்திருக்கிறது ஆனால் மணப்பெண் மாரடைப்பால் பலியாகிவிட்டார்.

திருமண நிச்சயம்
ஒடிசாவின் சோனேபூர் மாவட்டத்தில் ஜூலுண்டா கிராமத்தைச் சேர்ந்த ரோஸி சாஹு என்ற இளம் பெண்ணுக்கும் பலங்கீர் மாவட்டத்தில், டெட்டல்கான் கிராமத்தைச் சேர்ந்த பிசிகேசன் என்பவருடன் திருமணம் நடத்த பெற்றோர்கள் நிச்சயம் செய்தனர்.

மணமகன் வீடு
நிச்சயம் செய்தபடி அண்மையில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. ரோஸி சாஹுவிற்கு பிசிகேசன் திருமண மேடையில் தாலி கட்டினார். .
திருமணச் சடங்குகள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக நடந்தது. பின்னர் மணப்பெண் ரோஸி, தனது குடும்பத்தினரை பிரிந்து மனமகன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார்.

துக்கம் தாங்கவில்லை
ரோஸியை அவரது பெற்றோர் அவரது மாமியார் வீட்டுக்கு அனுப்பத் தயாராகி கொண்டிருந்தார்கள், ரோஸி அப்போது பெற்றோரை பிரிந்து செல்ல மனம் இல்லாமல் கண்ணீர் விட்டு அழுதார், ஒரு கட்டத்தில் துக்கம் தாளாமல் மயக்கம் அடைந்து தரையில் விழுந்தார்.

முகத்தில் தண்ணீர்
அதிர்ச்சி அடைந்த ரோசியின் குடும்பத்தினரும் உறவினர்களும் கைகளை மசாஜ் செய்து முகத்தில் தண்ணீர் தெளித்து, ரோஸி எழுப்ப முயன்றனர்.
அவரது குடும்ப உறுப்பினர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது.

மணப்பெண் சாவு
இதையடுத்து ரோஸியை உடனடியாக துங்குரிபாலி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (சி.எச்.சி) அழைத்துச் சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரும் சோகம்
பிரபல ஆங்கில ஊடகத்திடம் இதுபற்றி பேசிய ஜூலுண்டா கிராமத்தில் வசிக்கும் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையை இழந்ததால் ரோஸி சமீபத்தில் துன்பத்தில் இருந்தார். அவரது தாய்மாமனின் குடும்பத்தினரும் சில சமூக சேவையாளர்களும் தான் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டது என்று வேதனை தெரிவித்தார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications