வடகிழக்கு மாநிலங்களில் பாஜக நிலை என்னவாகும்? பரபரப்பில் 3 மாநில தேர்தல் ரிசல்ட்
Recommended Video

அகர்த்தலா: வடகிழக்கு மாநிலங்களில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அங்கு பாஜக அடைந்துள்ள முன்னேற்றம் இன்றைய ரிசல்ட்டில் தெரிந்துவிடும்.
தலா 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டசபைகளின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. திரிபுராவில் மா.கம்யூ வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததாலும், மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை
நாகாலாந்தை பொறுத்தவரை வடக்கு அங்காமி2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. மூன்று மாநில வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக முன்னேற்றம் காணுமா என்பது அதில் தெரியவரும்.

3 மாநிலங்களில் ஆட்சி
சமீபகாலமாக, வட கிழக்கு மாநிலங்களில் பாஜக செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அசாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை அக்கட்சி கைப்பற்றியுள்ளது பாஜக. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் காங்கிரசுக்கு இந்த முறை பாஜக கூட்டணி கடும் போட்டியை கொடுக்கிறது. நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையேதான் பலத்த போட்டி.

பாஜக வளர்ச்சி
1963ம் ஆண்டு முதல் இந்த மாநிலத்தில் 3 முதல்வர்களை கொடுத்த காங்கிரஸ் பாஜகவைவிட 2 தொகுதிகள் குறைவாக, வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. திரிபுராவிலும் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பாஜக சவாலாக திகழ்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து கணிப்புகள்
திரிபுராவில் இடதுசாரிகள் அல்லது பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு என்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுவதால் இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பிற 2 மாநிலங்களிலும் பாஜக கணிசமான வெற்றியை பெறும் என்கிறது கருத்து கணிப்புகள். மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பு என்றும், நாகாலாந்தில் மாநில கட்சியுடன் இணைந்து வெற்றிபெற பாஜகவுக்கு வாய்ப்பு என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களில் கால்பதிக்க முடியாத பாஜக, வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்கை அதிகரித்தபடி உள்ளது. எனவே அரசியல் பார்வையாளர்களின் பார்வை முழுக்க வடகிழக்கு மாநிலங்களை நோக்கி உள்ளது. தலா 59 தொகுதிகளுக்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் காலை 11 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications