பெங்களூரில் கொட்டித் தீர்த்த பேய் மழை! வெள்ளத்தில் மூழ்கிய பஸ்சிலிருந்து பயணிகள் தப்பியோட்டம்
பெங்களூர்: பெங்களூரில் கொட்டித் தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றது. சாலையில் சென்ற அரசு பஸ்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் கடந்த இரு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆரம்பித்த மழை இரவு வரை பெய்தது.
மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மழை துளி மிகவும் தடிமனாக அருவியில் விழுவதைப்போல இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கனமழை காரணமாக மெஜஸ்டிக் அருகேயுள்ள அனந்தராவ் சர்க்கிள் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் தேங்கியிருந்த மழை நீரில் அரசு பஸ்கள் மூன்று சிக்கிக் கொண்டன. அந்த பஸ்களின் முக்கால் பாகம் உயரத்துக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர், சிலர் தண்ணீரில் குதித்து தப்பியோடினர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவெல்லாம் தூங்க முடியாமல் மக்கள் அவஸ்தைப்பட்டனர். பல இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெங்களூர் நகரின் தாழ்வான பகுதிகளில் இன்று காலை வரையில் வெள்ளம் வடியவில்லை.
பெங்களூரில் வெறும் 3 மணி நேரத்திற்குள் 8.9 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளதாகவும், காற்றின் வேகம் 20 முதல் 25 கிலோ மீட்டர் அளவுக்கு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று, வெள்ளிக்கிழமை மாலையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications