For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காத்ரீனா கன்னம் மாதிரி ரோடு வழவழனு இருக்கணும்.. ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

Google Oneindia Tamil News

ஜெய்பூர்: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக்கெலாட் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ராஜேந்திரசிங்குதா பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சராக பதவியேற்ற பிறகு அமைச்சர் ராஜேந்திர குதா முதல் முறையாக தனது தொகுதிக்கு வந்தார். தொகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன என மக்கள் அப்போது அவரிடம் கோபமாக புகார் அளித்தனர்.

The Rajasthan minister who said that roads should be like the cheek of Katrina Kaif

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், மக்களை சிரிக்க வைக்கப்போவதாக நினைத்து அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, தனது தொகுதியின் சாலைகளை பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் கன்னங்களை போல வழவழப்பாக அமைக்க வேண்டும் எனக் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்ட ஊர்மக்கள் கைதட்டி ஆரவாரமிட்டு சிரித்தனர்.

அதுமட்டுமின்றி அதிகாரிகளிடம் பின்னர் அமைச்சர் ராஜேந்திரசிங் குதா, நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினிக்கு வயதாகிவிட்டதாகவும், அதற்குப் பதிலாக கத்ரீனா கைப்பின் கன்னங்களை சாலைகளுக்கான தரமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறியதாக வெளியான தகவல் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அரசியல்வாதிகள் சாலைகளின் தரத்துக்கு நடிகைகளின் கன்ன்ங்களை உவமையாக்க் குறிப்பிடுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் பீகார் முதலமைச்சராக இருந்த லாலுபிரசாத் சாலைகளை பாலிவுட் நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஹேம்மாலினியுடன் ஒப்பிட்டு பேசியது அப்போதே கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதேபோல் உத்தரபிரதேச அமைச்சர் ஒருவரும் பேசி வம்பில் மாட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜேந்திரசிங் குதாவின் சர்ச்சைப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள பலரும், சாலையின் தரத்தை ஒப்பிட அமைச்சருக்கு ஒரு பெண்ணின் கன்னம்தான் கிடைத்ததா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

English summary
JothiMani MP explain, why she Protest in Karur Collector office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X