ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு.. தயாநிதி, கலாநிதி மாறனுக்கு நிம்மதி அளிக்கும் தீர்ப்பல்ல - சு.சுவாமி
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாறன் சகோதரர்களுக்கு ஆறுதலை அளிக்கக் கூடியது இருக்கும் எனக் கருதமுடியாது என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவர்களுக்கு ஆறுதலை அளிக்கக் கூடியது இருக்கும் எனக் கருதமுடியாது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்துள்ளார். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக தாம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. அதில் தயாநிதி மாறன் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும்,
அந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பே முக்கியமானது என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். மாறன் சகோதரர்களுக்கு நிம்மதி அளிக்கும் தீர்ப்பு என ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை எப்படி கருத முடியும்? மலேசி்ய தொழில் அதிபர் சிவசங்கரனை மிரட்டியது தொடர்பான வழக்கு இது.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
அந்த வழக்கில் நான் மனுதாரராக வாதிடுகிறேன். நேற்று நடைபெற்றது என்னுடைய வழக்கு இல்லை. இது சிபிஐ தொடர்ந்த வழக்கு. முக்கிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த விவகாரத்தில் மாறன் கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்பது தான் முக்கிய குற்றச்சாட்டு என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications