விரைவில் ரூ.200 நோட்டுகள்.. அச்சிட உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு!
புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிட மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து விரைவில் 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

இதைத்தொடர்ந்து புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான பணிகளை தொடங்குமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான பணி ஆணையின் நகலை ரிசர்வ் வங்கி செய்தியாளர்களின் பார்வைக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணப்புழகத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விரைவில் 200 ரூபாய் நோட்டு பொதுமக்கள் புழக்கத்திற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications