”இதப்படிச்சுட்டு பக்கத்தில் இருக்கறவங்களுக்கு முத்தம் கொடுத்துறாதீங்க”
டெல்லி: எச்சரிக்கை....இந்த கட்டுரையை படித்தவுடன் நீங்கள் உள்ளுக்குள் உறைந்து போக நேரிடலாம்.
ஏனென்று கேட்கறீர்களா? ஒன்று நிறுத்த முடியாத சிரிப்பால் அல்லது மிக கடுமையான அழுகையால்.
அப்படிப்பட்ட ஜாலியான வீடியோதான் "முகம் அறியாதவர்களின் முத்தம்".

காப்பி குடிக்கும் போது கடந்து போனவர்:
நாம் காப்பி குடிக்கும் போதோ,நாயுடன் வழியில் வாக்கிங் போகும் போதோ சந்திப்பவர்களைதான் நாம் "வழிப்போக்கர்கள்" என்போம்.

வழிப்போக்கர்களின் முத்தம்:
அப்படிப்பட்ட ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகாத மாடல்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் குறிப்பிட்ட சிலர் அவர்களுக்கிடையே அப்படிப்பட்ட ஒரு முத்த சந்திப்பை நிகழ்த்த பிரபல எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் கொள்ளுப்பேத்தி லாங்லி ஃபாக்ஸால் வேண்டுகோள் விடப்பட்டனர்.

வேற்று உலகம்:
இந்த பொன்னான வீடியோ உங்களை கண்டிப்பாக வேறோரு உலகத்திற்கு அழைத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதல் முத்தம்:
மொத்தமாக 10 ஜோடிகள்.அவர்களில் ஒரு ஆண்-ஆண், பெண்-பெண் ஜோடியும் அடக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.அவர்கள் அனைவரும் அந்த முதல் முத்தம் கொடுத்துக்கொள்ள பட்ட பாடுகள் இருக்கிறதே!

லைட்டை அணைங்கடா:
ஒரு ஜோடி சிறிது நேரம் முடியை சரி செய்து கொண்டு இருந்தார்கள்.மற்றொரு ஜோடியோ "பிளீஸ் லைட் ஆப் பண்ணுங்க" என்றார்கள். ஒரு ஜோடி அப்போதுதான் தங்களை ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அனுமதி கேட்டு முத்தமிட்டவர்:
ஒருவர் தன்னுடைய இணையை பார்த்து "தங்களை நான் முத்தம் இட்டு கொள்ளலாமா?" என்று அனுமதி கேட்டு முத்தமிட்டார்.ஒரு ஜோடி "எத்தனை தடவை முத்தம் குடுக்கனும்?" என்று கேட்டது. ஒரு பெண் தன்னுடைய இணையை பார்த்து "ஹையையோ!!இவரை பார்த்தா பயமா இருக்கு" என்றார்.

ஹப்பா!! முடியலை:
இதெல்லாம் முத்தமிட துவங்கும் வரைதான்.அதுக்கப்புறம் எல்லாம் சென்சார்தான்.அந்த அளவுக்கு ஒன்றிப்போய் முத்தம் இட்டுக் கொண்டனர் எல்லா ஜோடிகளும்.சொல்ல முடியாது முகம் தெரியாமல் வந்தவர்கள் இந்த முத்ததிற்குப் பின் காதலர்களாக மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

உண்மை அன்பு அழிவதில்லை:
ஒவ்வோரு முகம் தெரியாத ஜோடியும் சிறிது நேர தயக்கத்திற்கு பின் முத்தமிட துவங்கியபோதுதான் ஒரு விசயம் தெளிவாக தெரிந்தது.உண்மையான அன்பு என்றுமே நீர்த்து போவதில்லை.அது முகம் தெரியாதவர்களுக்கு இடையேவாக இருந்தாலும் சரி.

அன்பு அழியாதது:
நாம் எவ்வளவு கடுமையானவர்களாக இருந்தாலும் மனதளவில் அன்பும்,காதலும் நிறைந்தவர்கள்தான்.ஆம், நாம் ஒருவரை நோக்கி கடுமையான பார்வையை வீசினாலும்,கடும் பாறையான மனதை கொண்டிருந்தாலும் நம்முள்ளே அன்பு அப்படியேதான் இருக்கும் என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

மொபைல் வாழ்க்கை:
இந்த வீடியோவின் மூலம் நம்மில் முக்கால் வாசி பேர் இன்று மொபைல் போன் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும்தான் வாழ்ந்து வருகிறோம்.

அன்புதான் இணைப்பு பாலம்:
மொத்ததில், இந்த தொழில்நுட்ப காலத்தில் சுருங்கிப்போன மனங்களை உண்மையான அன்பு நிறைந்த இணைப்புகள்தான் சேர்த்து வைக்கும் என உணர்த்துகிறது இந்த "வழிப்போக்கர்களின் முத்தம்".
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications