For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து சசிகலா கணவர் நடராஜனுக்கு விலக்கு அளித்தது சுப்ரீம்கோர்ட்!

நீதிமன்றத்தில சரண் அடைவதில் இருந்து சசிகலா கணவர் நடராஜனுக்கு சுப்ரீம்கோர்ட் அனுமதியளித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து சசிகலா கணவர் நடராஜனுக்கு சுப்ரீம்கோர்ட் விலக்கு அளித்துள்ளது.

1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்ஸஸ் சொகுசு காரை நடராஜன் இறக்குமதி செய்தார். புதிய காரை இறக்குமதி செய்ததற்காக ரூ1.6 கோடி வரி செலுத்த வேண்டும். ஆனால் புதிய காரை 1993-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழைய கார் என கூறி நடராஜன் வரி ஏய்ப்பு செய்தார்.

இது தொடர்பான வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 2010-ம் ஆண்டு சசிகலா கணவர் நடராஜன், தினகரனின் தம்பி ஜெஜெ டிவி பாஸ் என்கிற பாஸ்கரன், லண்டனைச் சேர்ந்த யோகேஷ் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி மேலாளர் சுஜாரிதா ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நடராஜனுக்கு சிறை தண்டனை

நடராஜனுக்கு சிறை தண்டனை

இத்தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

சரணடைய அவகாசம் கோரப்பட்டது

சரணடைய அவகாசம் கோரப்பட்டது

அப்போது நடராஜன் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அப்போது நடராஜன் சரணடைய அவகாசம் கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் நடராஜனின் கோரிக்கையை நிராகரித்தது.

விலக்கு கோரி மனு

விலக்கு கோரி மனு

இந்நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் நடராஜன் மனு அளித்தார். நடராஜன் மனுவை அவசர வழக்காக பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.

நடராஜன், பாஸ்கரனுக்கு விலக்கு

நடராஜன், பாஸ்கரனுக்கு விலக்கு

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நடராஜன் மற்றும் பாஸ்கரனுக்கு விலக்கு அளித்துள்ளது. சொகுசு கார் இறக்குமதி வழக்கில் உடல்நிலையை கருத்தில் கொண்டு இருவரும் தற்காலிகமாக சிறைக்கு செல்வதில் இருந்து சுப்ரீம்கோர்ட் நீதிபதி தீபக் குப்தா விலக்கு அளித்துள்ளார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

சசிகலாவின் கணவரான நடராஜனுக்கு அண்மையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிக்சை செய்யப்பட்டது. இதனைக் காரணம் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அண்மையில் பரோலில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court has granted exemption to Sasikala's husband Natarajan from surrender in court. Sasikala's husband Natarajan has filed a petition in the Supreme Court demanding exemption from surrender in the court. Chennai high court convicted Sasikala husband Natarajan two and half years jail in the Luxury car import case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X