அமித்ஷா தலைமையில் இன்று குஜராத்தில் மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம்.. 3 மாநில முதல்வர்களும் பங்கேற்பு
காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று குஜராத் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களையும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் 26வது கவுன்சில் கூட்டம் இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

அதேபோல மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகள், மத்திய உள்துறைச் செயலாளர், மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் செயலாளர் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956 இன் பிரிவு 15-22 இன் கீழ் கடந்த 1957ம் ஆண்டில் ஐந்து மண்டல கவுன்சில்கள் நிறுவப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் இந்த இதற்கு தலைவராக உள்ளார்.
இந்த கவுன்சிலின் உறுப்பினர்களாக முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் இருப்பார்கள். மேலும் புதிய உறுப்பினர்களாக இரண்டு மூத்த அமைச்சர்களை ஆளுநர் நியமனம் செய்வார். மட்டுமல்லாது ஒவ்வொரு மண்டல கவுன்சிலும் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் ஒரு நிலைக்குழுவையும் அமைத்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் மண்டல கவுன்சில்கள் உள்கட்டமைப்பு, சுரங்கம், நீர் வழங்கல், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் மற்றும் மாநில மறுசீரமைப்பு, நேரடி பலன் பரிமாற்றம் (DBT), தொலைத்தொடர்பு அல்லது இணையத்தின் பரந்த விரிவாக்கம் மற்றும் பொதுவான பிராந்திய நலன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்துகின்றன.












Click it and Unblock the Notifications