காந்தியை சுட்டவருக்கு சிலை.. பூஜை செய்யும் இந்து மகாசபா.. 1 நாளில் சிலையை அகற்ற உத்தரவு

மத்திய பிரதேச அலுவலத்தில் நாதுராம் கோட்ஸேவுக்கு இந்து மகாசபா வைத்திருக்கும் சிலையை 24 மணி நேரத்தில் அகற்ற கோரி உத்தரவு பிறப்பிக்கட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காந்தியை சுட்டவருக்கு சிலை.. பூஜை செய்யும் இந்து மகாசபா..வீடியோ

    போபால்: மத்திய பிரதேசத்தின் முக்கியமான நகரான 'குவாலியர்' என்ற பகுதியில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் நாதுராம் கோட்ஸேவுக்கு சிலை வைக்கப்பட்டது. காந்தியை கொன்றவருக்கு சிலையா என்று இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து இருந்தனர்.

    காங்கிரஸ் இந்த சில விவாகரத்தில் தலையிட்டது. இது குறித்து மூன்று முறை அந்த மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து இருந்தது.

    தற்போது குவாலியர் மாவட்ட நிர்வாகம் அந்த சிலையை 24 மணி நேரத்திற்குள் அகற்றக் கோரி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்து மகாசபா இந்த விஷயத்தில் புதிய 'பல்டி' ஒன்றை அடித்து இருக்கிறது.

    நாதுராம் கோட்ஸேவுக்கு சிலை

    நாதுராம் கோட்ஸேவுக்கு சிலை

    மத்திய பிரதேசத்தின் உள்ள 'குவாலியர்' என்ற மாவட்டத்தில் நாதுராம் கோட்ஸேவுக்கு கோவில் கட்ட இந்து மகாசபா முடிவு செய்து இருந்தது. இதற்காக அனுமதி கிடைக்காத காரணத்தால் பொது இடத்தில் சிலை வைக்க இந்து மகாசபா முடிவு எடுத்தது. ஆனால் அதற்கும் அனுமதி கிடைக்காத காரணத்தால் இந்து மகாசபா தனது அலுவலகத்திலேயே சில நாட்களுக்கு முன் நாதுராம் கோட்ஸேவுக்கு சிலை வைத்தது.

    ஏன் குவாலியர்

    ஏன் குவாலியர்

    இந்த நிலையில் அந்த சிலைக்கு தினமும் சம்ஸ்கிருத மந்திரம் சொல்லி பூஜை செய்து வந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் வார வாரம் 'அகண்ட பாரத மந்திரம்' என்ற புதிய மந்திரம் ஒன்றை உருவாக்கி சிறப்பு பூஜை செய்து இருக்கிறார்கள். கோட்ஸே காந்தியை கொல்வதற்கு குவாலியர் நகரில் இருந்துதான் சென்றார் என்பதற்காகவே இந்த பகுதியில் சிலை வைத்து இருந்ததாக அவர்கள் கூறியிருந்தார்கள்.

    காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

    காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

    இந்து மகாசபாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இது குறித்து அந்த மாவட்டத்தில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்திடம் முதலில் காங்கிரஸ் முறையிட்டது. ஆனால் அவர்கள் இந்த விஷயத்தில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பல முறை புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் காங்கிரஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு செய்தது.

    1 நாள் அவகாசம்

    1 நாள் அவகாசம்

    இந்த நிலையில் காங்கிரஸ் வழக்கு தொடுக்கும் என்றவுடன் குவாலியர் மாவட்ட நிர்வாகம் செயலில் இறங்கியது. சிலையை அகற்ற முதலில் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து இருந்தது. ஆனால் அவர்கள் சிலையை அகற்றாத காரணத்தால் மேலும் ஒருநாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 24 மணி நேரத்திற்குள் சிலையை அகற்ற வேண்டும் என கண்டிப்புடன் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

    சிலையே இல்லை

    சிலையே இல்லை

    தற்போது இந்த விவகாரத்தில் இந்து மகாசபா புதிய டிவிஸ்ட் ஒன்றை செய்து இருக்கிறது. முதலில் அந்த சிலை கோட்ஸேவின் கொள்கைகளை இளைஞர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறியிருந்தது. தற்போது நாங்கள் அப்படி ஒரு சிலையே வைக்கவில்லை. நாங்கள் எந்த விதமான பூஜைகளிலும் இடம்பெறவில்லை என்று பேசியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+