ம.பி. பா.ஜ.க. முதல்வரின் சொந்த ஊரில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லையாம்!
சேமாலியா பதார் ( செஷோர்): மத்திய பிரதேச மாநில முதல்வரான பா.ஜ.க. வின் சிவராஜ்சிங் சவுகானின் சொந்த ஊரான செஷோர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள செஷோர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட கொர்க்கு எனும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 5 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட 50 குழந்தைகளும் இங்கு உள்ளனர்.

இந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் ஏதும் இல்லாததால், படிப்பதற்காக மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பள்ளிக்கு காட்டு வழிப்பாதையில் 7 கி.மீ நடந்தே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இவர்களுக்கு வரும் கடிதத்தில் உள்ள குறிப்புகளை தெரிந்து கொள்ள 5 கி.மீ தொலைவிலுள்ள இன்னொரு கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.
இதுகுறித்து அந்த கிராம வாசியான கலேராம் கூறுகையில்,
நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் கடந்தும் எங்களது வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது என்கிறார்.
தேர்தலின் போது கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைவர்கள் இங்கு வருகின்றனர். அப்போது பள்ளிக் கூடம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வருபவர்கள் எங்களை கண்டு கொள்வதே இல்லை. எனது மகன் படிப்பதற்கான வாய்ப்பு இங்கே இருந்தால் அவனுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்கித்தர நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் கரன் சிங்.
இது மத்திய பிரதேச மாநில முதல்வரின் சொந்த ஊர் மட்டுமின்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.
"இல்லை என்ற வார்த்தையே என் அகராதியில் கிடையாது"- என அண்மையில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய சிவராஜ் சிங் சவுகானுக்கு, அருகி வரும் இந்த பழங்குடியின மக்களின் தேவை குறித்து அறியாமல் போனது ஏனோ?!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications