மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா
இந்தூர்: நாட்டில் மோடி அலை எதுவும் வீசவில்லை என்று நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
இதையடுத்து அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயண் பட்டேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

மோடி அலை
நாட்டில் மோடி அலை ஒன்றும் வீசவில்லை. அப்படி வீசினால் அவர் ஏன் பாதுகாப்பான தொகுதியாக தேர்வு செய்து போட்டியிட வேண்டும்.

என்னைப் போல்
மோடி என்னைப் போன்று கட்சிகிக்கு ஆதரவு இல்லாத தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டியது தானே. 35 முதல் 40 ஆண்டுகளில் பாஜக வெற்றி பெறாத தொகுதியை தேர்வு செய்து அவர் போட்டியிட்டிருக்கலாமே.

பொய் எக்ஸ்பிரஸ்
பொய் எக்ஸ்பிரஸ் ஒன்று குஜராத்தில் இருந்து ஓடுகிறது. மற்றொன்று மத்திய பிரதேசத்தில் இருந்து ஓடுகிறது. ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

சிவராஜ் சிங் சவுகான்
மத்திய பிரசேத்தில் 4 வயது குழந்தை கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

ஊழல்
மத்திய பிரதேசத்தில் ஊழலுக்கு பஞ்சமே இல்லை. சுரங்க ஊழல், ஓய்வூதிய ஊழல், சுக்னிதேவி கல்லூரி நில ஊழல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

காங்கிரஸ்
காங்கிரஸ் மக்களை சாதி, மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது இல்லை. காங்கிரஸ் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து மத, சமூகங்களைச் சேர்ந்த மக்களை இணைத்து பணியாற்றுகிறது.

செல்போன்
ஒரு காலத்தில் வசதி உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த செல்போன், கம்ப்யூட்டர்கள், இரு சக்கர வாகனங்கள் தற்போது அனைவருக்கும் கிடைத்துள்ளதற்கு காங்கிரஸின் கொள்கைகள் தான் காரணம் என்றார் நக்மா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications