டெல்லியில் சுதந்திர தினநாளில் குண்டுகள் வெடிக்கும்.. அமெரிக்காவில் இருந்து வந்த போன் மிரட்டல்
டெல்லி: வரும் 15ம் தேதி டெல்லி மற்றும் நொய்டாவில் குண்டுகள் வெடிக்கும் என அமெரிக்காவில் இருந்து வந்த போன் அழைப்பால் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தன்று தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நொய்டாவில் வசிக்கும் அமித் என்பவருக்கு கடந்த 11ம் தேதி இரவு போன் அழைப்பு வந்துள்ளது.

எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவர், ஹலோ, 15ம் தேதி டெல்லி மற்றும் நொய்டாவில் குண்டுகள் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். முதலில் இதை ஜோக் என்று நினைத்த அமித் பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் அந்த எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து அழைப்பு வந்தது தெரிய வந்துள்ளது. இந்த அழைப்பு போலியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் போலீசார் இந்த விஷயத்தை லேசாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இதையடுத்து டெல்லி மற்றும் நொய்டாவில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications