சானிட்டரி நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டி வரி... "குப்பைகளில் வீசப்பட்ட" மாணவிகளின் போராட்டம்
சானிட்டரி நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எந்த வகையிலும் இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
டெல்லி: பெண்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் சானிட்டரி நாப்கின்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற போதிலும் எந்த வகையிலும் அதுகுறித்து மத்திய அரசு வாய்திறக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் நாடு முழுவதும் ஒரே வரி என்ற முறை அமல்படுத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதில் பொருட்களின் விலை குறையும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. சொகுசு பொருட்களுக்குத்தான் விலையேற்றம் என்ற போதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு சுகாதாரத்துக்கு உதவும் சானிட்டரி நாப்கின்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.

12 சதவீதம் அதிகரிப்பு
சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மெல்ல மெல்ல துணி வைப்பதிலிருந்து நாப்கின்களை பயன்படுத்தும் அளவுக்கு விழிப்புணர்வு கொண்ட பெண்கள் இந்த அறிவிப்புக்கு பிறகு, துணியையே நாடி நிலை ஏற்பட்டது. இதனால் பாலியல் தொழில் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் பொருளாதார நிலைக்கு நாப்கின்களை பயன்படுத்துவது கடினம் என்றே கூறினர். மேலும் ஆண்கள் சுகத்துக்காக பயன்படுத்தும் காண்டம்கள் மீது எந்த வரியையும் விதிக்காமல் பெண்கள் சுகாதாரத்துக்கா பயன்படுத்தும் நாப்கின்கள் மீது வரியா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

மாணவிகள் போராட்டம்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் நாப்கின்களால் பெண்களுக்கு ஏற்படும் சுகாதாரம் குறித்து எழுதி அதை மோடிக்கு அனுப்பும் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தனர். இன்னும் சிலரோ பாஜக அரசுக்கு நாப்கின்களை பார்சலாக அனுப்பியே வைத்தனர். இதன் முக்கியத்துவம் கருதி இளம்பெண்களும் போராட்டம் நட்தித வருகின்றனர்.

ஏன் அறிவிப்பு
நாப்கின்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து இன்றைய பட்ஜெட்டில் ஏதேனும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு அறிவிப்பையும் ஜேட்லி கொடுக்கவில்லை.

ஜிஎஸ்டி கவுன்சில்
நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும் அதுகுறித்தாவது மத்திய அரசு அறிவித்திருக்கலாமே என்று பெண்கள் நினைக்கின்றனர். எந்த அறிவிப்பும் இல்லாதது எத்தனை போராட்டம் நடத்தினாலும் நாப்கின் மீது வரி குறைக்கப்படாது என்ற அர்த்தத்தையும் ஏமாற்றத்தையும் கொடுப்பதாகவே உள்ளது இந்த பட்ஜெட்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications