''என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள்''... பாஜக மீது மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு!
கொல்கத்தா: தனது பிரசாரத்தில் கூட்டம் வராததால் அமித் ஷா விரக்தியடைந்து என்னை கொல்ல பார்க்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
நாட்டை வழிநடத்துவதற்கு பதிலாக, அவர் கொல்கத்தாவில் அமர்ந்து டி.எம்.சி தலைவர்களை துன்புறுத்தும் சதித்திட்டத்தை மேற்கொள்கிறார் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் ரோயாரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திடீரென அடிபட்டு காயம் அடைந்தார். தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். ஆனால் தேர்தல் ஆணையம் மம்தா காரின் கதவு இடித்து காயமடைந்ததாக கூறியது.
மம்தா வாக்குகளை பெற நடமாடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மம்தா தற்போது வீல் சேரில் அமர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மெஜியாவில் நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- தனது பிரசாரத்தில் கூட்டம் வராததால் அமித் ஷா விரக்தியடைந்துள்ளார். நாட்டை வழிநடத்துவதற்கு பதிலாக, அவர் கொல்கத்தாவில் அமர்ந்து டி.எம்.சி தலைவர்களை துன்புறுத்தும் சதித்திட்டத்தை மேற்கொள்கிறார்.
அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் என்னைக் கொல்ல விரும்புகிறார்களா? என்னைக் கொன்றதன் மூலம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications