இனிமேலாவது பத்திரமா வச்சிக்கோ... திருடிய செல்போனை கூரியரில் ரிட்டர்ன் செய்த திருடர்ர்ர்ர்!!
இந்தூர்: திருடிய மூன்று போன்களையும் அதன் உரிமையாளருக்கு கூரியர் மூலம் திருப்பி அனுப்பியுள்ளான் மத்தியப்பிரதேசத்தில் திருடன் ஒருவன். கூடவே இனி மேலாவது போன்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற அறிவுரை வேறு.
கடந்த மாதம் 14ம் தேதி தனது ஸ்கூட்டரின் பொருட்கள் வைக்கும் பெட்டியில் வைத்திருந்த தனது மூன்று செல்போன்களைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார் 22 வயதான கிராதிகா என்ற இளம்பெண்.
அவரின் புகாரின் பேரில் போலீசால் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கிராதிகாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூரியர் ஒன்று வந்துள்ளது. அனுப்பியவரின் பெயரில்லாமல் வந்த அந்த கூரியரைத் திறந்து பார்த்த கிராதிகாவுக்கு ஆனந்த அதிர்ச்சி.
காரணம் அதன் உள்ளே காணாமல் போன அவரது மூன்று செல்போன்களும், கூடவே ஒரு பேப்பரும் இருந்தது. அதில் ‘இனிமேலாவது செல்போன்களை பத்திரமாக வைத்துக் கொள்' என அறிவுரை கூறப்பட்டிருந்தது.
உடனடியாக இது தொடர்பாக போலீசுக்கு கிராதிகா தகவல் அளித்தார். அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது முகவரி மூலம் திருடன் போனைத் திருப்பித் தந்துவிட்டதாகக் கூறிய போலீசார், ‘திருடனை நாங்கள் கண்டு பிடித்து விடுவோம் என்ற அச்சத்தில் தான் அவன் அதனை திருப்பி அனுப்பி விட்டான்' எனத் தெரிவித்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications