ஒடிசாவில் மற்றொரு கொடூரம்.. திருநங்கையை ஆடை அவிழ்த்து செருப்பால் அடித்த கும்பல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிசாவில், திருநங்கை ஒருவரை இளைஞர்கள் கொண்ட கும்பல் அடித்து உதைக்கும் வீடியோ நெஞ்சை பதறச் செய்வதாக உள்ளது.
ஒடிசா மாநிலத்தில், ஆம்புலன்ஸ் கொடுக்காததால், டி.பி.யால் உயிரிழந்த மனைவியை 10 கி.மீ தூரம் தோளில் தூக்கியபடி நடந்து சென்ற கணவர் போட்டோ வைரலாகி அனுதாபத்தை அள்ளியது.
இந்நிலையில், மல்கன்கிரி பகுதியில் திருநங்கையை கொடூரமாக, ஒரு கும்பல் தாக்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பணம் கொடுக்காததால் அந்த திருநங்கை, சாபம் விட்டதாகவும், இதனால், அந்த திருநங்கையை கொடூரமாக அக்கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
திருநங்கையை அடித்து உதைத்த கும்பல், சாலையில் தள்ளி, ஆடையை அவிழ்த்து, செருப்பால் அடிக்கும் அந்த காட்சி பதறச் செய்வதாக உள்ளது.












Click it and Unblock the Notifications