ஓய்ந்தது மழை.. பெட்ரோல், டீசல் போட நீண்ண்ண்ண்...ட கியூவில் காத்திருக்கும் திருச்சூர் மக்கள்!
Recommended Video

திருச்சூர்: திருச்சூரில் பெட்ரோல் டீசல் போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்து வந்த மழையால் அந்த மாநிலமே வெள்ளக்காடானது. இதையடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

பத்தினம்திட்டா, செங்கனூர், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கேரளாவுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டது.
அதேபோல் மழையும் நின்றுவிட்டது. இதையடுத்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டு இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் திருச்சூரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து தற்போது பணிக்கு செல்கின்றனர். இதற்காக தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் வீடியோவை பார்க்கும் போது பகீரென்று உள்ளது. கிட்டதட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இவற்றுக்கு எப்போது பெட்ரோல் போட்டு எப்போது அவர்கள் வெளியே வருவது என்பதை நினைக்கவே மலைக்கிறது.












Click it and Unblock the Notifications