For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாலை கேட்டு கடிதம் எழுதிய 9ம் வகுப்பு மாணவி– உடனடியாக நிறைவேற்றிய முதல்வர்

Google Oneindia Tamil News

இந்தோர்: மத்திய பிரதேசத்தில் தன்னுடைய கிராமத்திற்கு சாலை வேண்டும் என்று சளைக்காமல் கடிதம் எழுதி போராடிய 9 ஆம் வகுப்பு ஏற்ற முதல்வர் சவுகான் அம்மாணவியை பாராட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி மைமோனாகான். கிராமத்தில் வசிக்கும் இந்த மாணவி அருகில் உள்ள ஊருக்கு சென்று படித்து வருகின்றார்.

ஆனால், அம்மாணவியின் கிராமத்தில் சரியான சாலை வசதிகள் இல்லை. இதனால் தன்னுடைய கிராமத்திற்கு சாலை வசதி கோரி முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு அம்மாணவி கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அக்கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.அடுத்த கடிதத்திற்கும் பதில் வரவில்லை.

மனம்தளராத மோனா மீண்டும் மூன்றாவது முறையாக கடிதம் எழுதினார். இது முதலமைச்சர் சிவராஜ் சிங்கிடம் சென்றடைந்தது. கடிதத்தைப் படித்த முதல்வர் அதிகாரிகளை அழைத்து அம்மாணவியின் கிராமத்துக்கு சாலை போட உடனடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியருடன் இணைந்து அம்மாணவியின் கிராமத்திற்கு சாலை போடப்பட்டது.

இதனையடுத்து தங்களது கிராமத்திற்கு சாலை கிடைக்கப் போராடிய மாணவியைப் பாராட்டிய கிராம மக்கள், முதல்வருக்கும் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.

English summary
Driven by the problems faced by her due to lack of proper road connectivity, a Narsinghpur-born girl Maimoona Khan got a road constructed to her village after she wrote three letters to the MP CM Shivraj Singh Chouhan requesting construction of roads in her village, a report published in TwoCircles said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X