ஆசியாவின் பிரமாண்ட ஏரோ இந்தியா ஷோ... பெங்களூரில் தொடங்கியது!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பிரபலமான பெங்களூரு ஏரோ இந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். ஆசியாவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி என்ற பெயரைப் பெற்றுள்ள இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, இந்தியாவின் படைகளை நவீனப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

This is the Largest Ever Aero India, Says PM Modi

தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், மிகப் பெரிய ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்தியா மிகப் பெரிய வாய்ப்புகளை உள்ளடக்கிய மிகப் பெரிய நாடு. 10வது ஏரோ இந்திய ஷோவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

நமது நாட்டுக்குள் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், சர்வதேச அளவில் இந்தியாவின் பால் மற்றவர்களை ஈர்ப்பதற்கும் இது உதவும்.

நாம் நமது பாதுகாப்பு ஆயத்த நிலையை வலுப்படுத்த வேண்டியது அவசியம். நமது பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்த வேண்டியது அவசியம். எதிர்காலத் தேவைக்கேற்ப நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இனிமேல் தொழில்நுட்பம்தான் கோலோச்சும். அதற்கேற்ப நாமும் மாற வேண்டும்.

உலக அளவில் மிகப் பிரபலமான பல்வேறு தொழில்நுட்பங்களின் சங்கமமாக இந்த கண்காட்சி திகழும். இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திப் பிரிவின் வளர்ச்சியை உலகுக்குக் காட்ட இது நல்ல வாய்ப்பும் ஆகும்.

உயரிய நோக்கத்துடன் நமது பாதுகாப்புத் துறையை நாம் வளர்க்க வேண்டும். இந்தியாவிலேயே பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களைத் தயாரிக்க முன்னுரிமை தர வேண்டும் என்றார் மோடி.

This is the Largest Ever Aero India, Says PM Modi

மோடி மேலும் பேசுகையில், நமது பாதுகாப்பு ஏற்றுமதியின் அளவு 20 முதல் 25 சதவீதம் வரை இருந்தால் கூட நமக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பாதுகாப்பு தளவாட இறக்குமதியில் நாம் நம்பர் ஒன்னாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் ஏற்றுமதியில் முன்னேற வேண்டும்.

நமது உள்நாட்டுக் கொள்முதல் அளவை 40 முதல் 70 சதவீதமாக அதிகரித்தால் நமது உற்பத்தி அளவு 2 மடங்காக உயரும்.

This is the Largest Ever Aero India, Says PM Modi

நாம் நமது பாதுகாப்புத்துறையை மேம்படுத்த முனைப்புடன் உள்ளோம். அதற்கு மேக் இன் இந்தியா திட்டம் உதவும். இதில் பல முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. அதை நான் அறிவேன். அதை நாம் செய்வோம்.

நமது வீரர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில்துறையினர், ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இணைந்து வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும்.

நமது வரி அமைப்புகள் உற்பத்தியை பாதிக்காத அளவுக்கு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்புத் துறையில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. நமது பாதுகாப்புத்துறையில் அரசுத் துறையினர், தனியார் துறையினர், வெளிநாட்டு நிறுவனங்கள் என அனைவரின் பங்களிப்பையும் இடம் பெறச் செய்வோம் என்றார் மோடி.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூரு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மோடி வந்து சேர்ந்தார். அதன் பின்னர் அவர் ஏரோ இந்தியா கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

This is the Largest Ever Aero India, Says PM Modi

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பின்னர் ஸ்டெம் செல் பயாலஜி கழகத்திற்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவார். மேலும் நிமான்ஸ் பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்கிரார். அதன் பின்னர் அவர் டெல்லி திரும்புவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+