மமதாவை பாஜக குறி வைப்பது இதனால்தான்.. மோடியை கடுமையாக கலாய்க்கும் அகிலேஷ் யாதவ்!

மேற்கு வங்கத்தில் பாஜக கடந்த சில நாட்களாக அதிக ஆர்வம் காட்டுவதும், கவனம் செலுத்துவதும் ஏன் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Mamta slam Amit Shah: அமித்ஷாவை யாரும் எதிர்க்கக் கூடாதா?.. மம்தா கேள்வி- வீடியோ

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக கடந்த சில நாட்களாக அதிக ஆர்வம் காட்டுவதும், கவனம் செலுத்துவதும் ஏன் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து இருக்கிறார்.

    பிரதமர் மோடி இந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கம் மீதுதான் அதிக கவனம் செலுத்தினார். மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்க பிரச்சாரம் அதிக திட்டமிட்டு பாஜகவால் நடத்தப்பட்டு உள்ளது. மோடி இங்குதான் அதிக அளவில் பிரச்சாரம் செய்தார்.

    This is why Modi is targetting West Bengal explains Akhilesh Yadav

    தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே அங்கு ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டதற்கு கூட இதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு எல்லாம் மமதா அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை அங்கு நடந்த பிரச்சாரத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது.

    அமித் ஷா தலைமையில் நடந்த பிரச்சாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் பொதுச் சொத்துக்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அகிலேஷ் யாதவ் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

    அதில், உத்தர பிரதேசத்தில் பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டது. இங்கு மெகா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்ல போகிறது. பாஜக 10 இடங்களை கூட உத்தர பிரதேசத்தில் வெல்லப்போவது கிடையாது.

    அந்த தோல்வி பயம் மோடிக்கு வந்துவிட்டது. அதனால்தான் அவர் மேற்கு வங்கத்தை நோக்கி திரும்பி இருக்கிறார். உத்தர பிரதேசத்தை போல மேற்கு வங்கமும் பெரிய மாநிலம்தான். அதனால்தான் அவர் அந்த மாநிலத்தை நோக்கி சென்று இருக்கிறார்.

    அங்கு 10 இடங்களாவது வெற்றிபெற முடியுமா என்று அவர் நினைக்கிறார். உத்தர பிரதேசத்தில் விட்டதை பிடிக்க மோடி நினைக்கிறார். ஆனால் அங்கும் மக்கள் அவருக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். மேற்கு வங்க மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் மேற்கு வங்க மக்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

    நீங்கள் உத்தர பிரதேசம் போல பாஜகவை புறக்கணியுங்கள். நீங்கள் மமதாவை தேர்வு செய்யுங்கள். அவர்தான் உங்கள் எதிர்காலம், என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டு இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+