கொலையை மறைக்க திரிஷ்யம் டெக்னிக்.. போலீஸில் சிக்கிய இளைஞர்!
பாட்னா: பீகாரைச் சேர்ந்த 38 வயது நபர் தான் செய்த கொலையை மறைக்க இந்தியில் வெளியான திரிஷ்யம் படத்தில் வரும் டெக்னிக்கைப் பயன்படுத்தி அது தோல்வியில் முடிந்து தற்போது போலீஸாரிடம் மாட்டியுள்ளார்.
சினிமாவில் வரும் காட்சிகள் பெரும்பாலும் நிஜத்தில் பலன் தராமல் போகும். அதை நிரூபித்துள்ளது பீகாரில் நடந்த ஒரு சம்பவம்.

பீகார் மாநிலம் வைஷாலியைச் சேர்ந்தவர் ரஜ்னீஷ் சிங். இவரை ஒரு கொலை வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ரஜ்னீஷ் சிங்குக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் தனது மனைவி பட்டிக்காடக இருப்பதாக வருத்தப்பட்ட அவர் மாடர்ன் பெண்ணை மணந்து டெல்லியில் குடியேற விரும்பினார். இதையடுத்து ஒரு திருமண இணையதளத்தில் தனது புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார். தான் பெரும் பணக்காரர் என்று அதில் கூறியிருந்தார்.
அதைப் பார்த்து இந்தூரைச் சேர்ந்த சிருஷ்டி ஜெயின் சிங்குக்கு அறிமுகமானார். இருவரும் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் சிங்கை நேரில் பார்ப்பதற்காக புறப்பட்டு வந்தார் சிருஷ்டி. பத்து நாட்களுக்கு முன்பு பாட்னாவில் வைத்து இருவரும் சந்தித்தனர்.
ஜனவரி 25ம் தேதி இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது சிங் குறித்த உண்மையை சிருஷ்டி தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் உன்னை மணக்க முடியாது என்று கூறியுள்ளார் சிருஷ்டி. மேலும் அங்கிருந்து கிளம்பி ரயில் நிலையத்துக்குப் போய் விட்டார்.
இதனால் கோபமடைந்த சிங் அவரைப் பின் தொடர்ந்து வந்து ரயில் நிலையத்திற்கு வெளியே வைத்து அவரைப் பிடித்து நிறுத்தினார். பின்னர் துப்பாக்கியால் சிருஷ்டியை மிக நெருக்கத்தில் வைத்து சுட்டுக் கொன்றார். பின்னர் தப்பி ஓடி விட்டார்.
அப்படிப் போகும்போது திரிஷ்யம் படத்தில் வருவது போல சில காரியங்களைச் செய்தார் சிங். அதாவது தனது மொபைல் போனை ஒரு லாரியில் போட்டுள்ளார். ஆனால் அது லாரியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டது. அதேபோல திரிஷ்யம் படத்தில் வருவது போல தனது பைக்கை கங்கை ஆற்றில் போட்டுள்ளார். இதற்காக ஒரு படகோட்டியைப் பிடித்து அவருக்கு ரூ. 500 பணம் கொடுத்து பைக்கை கொண்டு போய் படகில் வைத்து ஆற்றில் போட்டுள்ளார் சிங்.
ஆனால் போன் தவறி கீழே விழுந்ததால் அவரது திட்டம் தோல்வியில் முடிந்து தற்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications