5 வயது மகளை காரில் போட்டுக் கொண்டு மனைவியின் வெட்டப்பட்ட உடலை எரிக்க அலைந்த ஸ்டாக் புரோக்கர்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒரு பங்குச் சந்தை புரோக்கரை போலீஸார் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். தனது மனைவியைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டிய அவர் அதை காரில் போட்டுக் கொண்டு எரிப்பதற்கு இடம் தேடி அலைந்தபோது போலீஸாரிடம் சிக்கினார்.
இதில் என்ன கொடுமை என்றால் வெட்டிய மனைவியின் உடல் துண்டுகளை ஒரு பையில் போட்டுக் கொண்ட அவர் தனது 5 வயது மகளையும் காரில் ஏற்றிக் கொண்டு உடலை எரிக்க இடம் தேடி அலைந்ததுதான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அந்த நபரின் பெயர் ரூபேஷ் குமார் அகர்வால். 35 வயதாகும் இவர் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்தார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் போட்டு அடைத்தார். அதை தனது காரில் போட்டுக் கொண்டார். பின்னர் தனது 5 வயது மகளையும் காரில் ஏற்றிக் கொ்டு ஹைதராபாத்துக்கு அருகே உள்ள ஒரு கிராமப் பகுதிக்குச் சென்றார்.
அங்கு வைத்து தனது மனைவியின் உடலை தீவைத்து எரிக்க அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படியே உடலையும் ஒரு புதரில் போட்டு தீவைத்தார். புகை வருவதைக் கண்ட கிராமத்தினர் ஓடி வந்தனர். அங்கு அகர்வால் நிற்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராம மக்களைப் பார்த்த அகர்வால் காரில் ஏறி பறக்க முயன்றார். ஆனால் கார் சேறுக்குள் சிக்கிக் கொண்டதால் போக முடியவில்லை. இதனால் அவர் பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டார். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கைது செய்தனர்.

கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் சிந்தியா என்று தெரிய வந்துள்ளது. அவர் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த 8 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தனர். பணம் தொடர்பான ஒரு பிரச்சினையில் தனது மனைவியைக் கொலை செய்துள்ளார் அகர்வால்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications