தசரா நிறைவுநாள் விழா: கோலாகலமாகத் தொடங்கியது ‘ஜம்போ சவாரி’
மைசூர்: தசரா விழாவின் கடைசி நாளான இன்று, ஜம்போ சவாரியை ரசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் மைசூரில் திரண்டுள்ளனர்.
10 நாட்கள் கொண்டாடப்பட்டு வந்த தசராவின் 10 வது நாளான இன்று மைசூரில் நடந்த கோலாகல நிறைவு விழாவில் யானையின் மீது சாமூண்டீஸ்வரி அம்மன் அம்பாறையில் வந்த அழகிய ஊர்வலம் தொடக்கியது.
விஜயதசமியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பலராமா யானை மீது தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர்ந்து சாமூண்டீஸ்வரி வலம் வந்த அந்த காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
விழாவிற்கான பாதுகாப்புப் பணியில் சுமார் 6000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அலங்கரிக்கப்பட்ட மேடையில் இருந்து அம்மன் மீது மலர் தூவி வழிபட்டார் மைசூர் மகாராஜா பரம்பரையில் வந்த சாமராஜ உடையார். இந்த வழக்கத்தை கி.பி.1880-ஆம் ஆண்டில் தசராவின் போது பத்தாம் சாம்ராஜ உடையார் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications