மீண்டும் அலறுதே மணிப்பூர்.. போலீசார் வாகனத்தை நோக்கி சரமாரி துப்பாக்கி சூடு.. 3 காவலர்கள் படுகாயம்
இம்மாபல்: மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே போலீஸ் கான்வாயை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அப்போது அங்கே வன்முறைச் சம்பவங்கள் கையை மீறிச் சென்றன. மாநிலமே பற்றி எரியும் சூழல் ஏற்படவில்லை.

பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அங்கே முழுமையாக அமைதியான சூழல் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கே பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். அங்கே கடுமையான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை.
வன்முறை: குறிப்பாக அங்கே பெண்கள் மீது பலாத்கார சம்பவங்களும் நடந்தன. இதில் நேரடியாக உச்ச நீதிமன்றமும் கூட தலையிட வேண்டி இருந்தது. அதன் பின்னரே அங்கே சற்று அமைதி திரும்பியது. அதன் பின்னர் அங்கே சில காலம் அங்கே அமைதி திரும்பிய போதிலும், மீண்டும் இப்போது வன்முறை ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே மணிப்பூரில் இப்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் போலீசாரை ஆயுதமேந்திய குழுக்கள் தாக்கியதில் மூன்று போலீசார் படுகாயமடைந்தனர். அங்கே எல்லையோர கிராமம் ஒன்றில் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரியாக இருந்த சிங்தம் ஆனந்த் குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பிற்காக இந்த கான்வாய் அனுப்பப்பட்டது. அதைச் சுற்றி வளைத்துத் தான் ஆயுதமேந்திய சிலர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
துப்பாக்கிச் சூடு: மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் மோரே என்ற இடத்தில் சப் டிவிஷனல் அதிகாரி சிங்தம் ஆனந்த் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் உடனடியாக அருகில் இருந்த ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுதமேந்திய அந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கையைத் தீவிரப்படுத்த மோரே நகருக்குக் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன.
இந்திய- மியான்மர் தேசிய நெடுஞ்சாலையில் மணிப்பூர் காவல்துறையின் இந்த கான்வாய் சென்று கொண்டிருந்த நிலையில், அவை இரண்டு வெவ்வேறு இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. மறைந்திருந்த அந்த குழுவினர் கான்வாயை குறிவைத்துத் தாக்கியுள்ளனர். போங்யாங் கிராமத்தில் முதலில் தாக்குதல் நடத்தப்பட்டது, இருப்பினும், இதற்கு போலீசார் பதிலடி கொடுக்காமல் மோரே நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தது. இதற்கிடையே கே சினம் கிராமத்தில் இரண்டாவது தாக்குதல் நடந்தது.
படுகாயம்: அப்போது போலீஸ் கான்வாயை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதில் ஹெட் கான்ஸ்டபிள் எஸ் துய்காவாங், மற்றும் கான்ஸ்டபிள்கள் எஸ் சேகர்ஜித் மற்றும் எல் பாங்கிம் சிங் என்று மூன்று கமாண்டோக்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ராஜ் மெடிசிட்டி மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். துய்காவாங்கின் கை மற்றும் அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்துள்ளது. சேகர்ஜித் மற்றும் பாங்கிம் இருவருக்கும் கால்களில் புல்லட் பாய்ந்துள்ளது.
இதற்கிடையே சப் டிவிஷனல் அதிகாரி சிங்தம் ஆனந்த் கொலை விவகாரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.. இதையடுத்து கூட்டு நடவடிக்கைக் கிழியை மணிப்பூர் அரசு அமைத்துள்ளது. மேலும், மணிப்பூர் சிங்தம் ஆனந்துக்கான ஏற்பாடு செய்த விழாவையும் ரத்து செய்துள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications