கர்நாடகா: மாண்டியா கோவிலுக்குள் 3 அர்ச்சகர்கள் படுகொலை- உண்டியலில் ரூபாய் நோட்டுகள் மட்டும் கொள்ளை!
மாண்டியா: கர்நாடகாவின் மாண்டியாவில் கோவிலுக்குள் நுழைந்து 3 அர்ச்சகர்கள் படுகொலை செய்யப்பட்டு கோவில் உண்டியல்களில் இருந்த ரூபாய் நோட்டுகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாண்டியா மாவட்டத்தின் குட்டாலு என்ற இடத்தில் ஶ்ரீ ஆரகசேவரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் அர்ச்சகர்களான கணேஷ், பிரகாஷ் மற்றும் ஆனந்த படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

கோவில் உண்டியல்களும் வெளியே எடுத்துவரப்பட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியல்களில் இருந்து ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு சில்லறை நாணயங்களை கொள்ளை கும்பல் விட்டுச் சென்றிருக்கிறது.
கோவிலை பாதுகாப்பதற்காகவே 3 அர்ச்சர்களும் அங்கேயே உறங்குவது வழக்கமா. இதை நோட்டமிட்டே கொள்ளைக் கும்பல் இந்த படுகொலை, கொள்ளை சம்பவத்தை நடத்தியிருக்கிறது.
கோவிலுக்குள் பொதுமக்கள் இன்று சென்று பார்த்த போது இந்த பயங்கர சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து 3 அர்ச்சர்களின் உடல்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ5 லட்சம் நிதி உதவி
இதனிடையே படுகொலை செய்யப்பட்ட 3 அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவியை முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications