புரி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து தீ விபத்து
புரி: புரி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேற்று மாலை திடீரென அடுத்தடுத்து நிகழந்த தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா மாநிலம் புரி ரயில் நிலையத்தில் நந்தன்கன்னன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் 4-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் புரி ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்கு தயாராக இருந்தது. அப்போது நின்று கொண்டிருந்த ரயிலின் 11 மற்றும் 12-வது பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் 2 வது பிளாட்பாரத்தில் இருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பரவியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனிடையே புரி-ஹவுரா எ்க்ஸ்பிரஸ் ரயிலிலும் தீ பரவியது. ரயில் நிலையம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது.
இதனால் அங்கு இருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரயிலில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications