உண்மையை சொல்லு சப்னா.. ஒரு குழந்தைக்கு 3 அப்பா.. உரிமை கொண்டாடி வந்த 3 பேர் .. திகைத்த மருத்துவனை
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தான் தான் அப்பா என்று கூறி 3 பேர் மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துமனை நிர்வாகம் திகைத்து போனது. இதனால் போலீசின் உதவியை மருத்துவமனை நாடியுள்ளது.
வடிவேலு மருதமலை படத்தில் போலீஸ்காரராக நடித்து இருப்பார். அப்போது ஒரு பெண்ணை கூட்டிவரும் நான்கு பேர், நான் தான் கணவன், நான் தான் புருஷன் என மாற்றி மாற்றி சொல்வார்கள். அதன்பிறகு அவர் உண்மையான முதல் புருஷனிடம் மனைவியை ஒப்படைப்பார்.
அதேபோல் ஒரு சம்பவம் தான் கொல்கத்தாவிலும் நடந்துள்ளது. என்ன வடிவேலுவிடம் 3 கணவன்கள் ஒரு மனைவிக்காக சண்டை போடுவார்கள். இங்கு ஒரு குழந்தைக்கு 3 அப்பாக்கள் சண்டை போட்டுள்ளார்கள்.

பெண் குழந்தை பிறந்தது
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேதாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீபன்கார் பால் என்பவர் தனது மனைவி என்று கூறி கர்ப்பிணியான சப்னா மைத்ராவை கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதித்தார். கடந்த ஞாயிற்றுகிழமை சப்னாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

போலீசில் புகார்
சப்னா தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்திருக்கிறார்கள். இதை பார்த்து ஹர்ஸா கேத்ரி என்பவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். ஸ்வப்னா தனது மனைவி என்றும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடைய குழந்தை என்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் நேதாஜி நகர் போலீசில் புகார் அளித்தது.

முதல் கணவர் விரட்டியப்பு
அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், ஹர்ஸா, சப்னாவுடன் தனக்கு நடந்த திருமணத்திற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை மருத்துவமனையில் காண்பித்து இருக்கிறார். இதையடுத்து சப்னாவின் உண்மையான கணவர் ஹர்ஸா தான் என முடி செய்த போலீசார் அவரை மட்டும் சப்னா மற்றும் குழந்தையுடன் இருக்க அனுமதித்தனர். அதேநேரம் தீபன்கர் பாலை விரட்டி அடித்தனர.

குழந்தைக்கு உரிமை கோரினார்
இதனிடையே திடீர் திருப்பமாக பிரதீப் ராய் என்ற இளைஞர், தான் தான் சப்னாவின் உண்மையான கணவன் என்று மருத்துவமனைக்கு சென்று கோரியுள்ளார். இதனை கேட்டு தலை சுற்றிப்போன மருத்துமனை ஊழியர்கள் 3 கணவன்களையும் விரட்டிவிட்டதோடு, மீண்டும் போலீசாரை நாடினர். குழந்தைக்கும், சப்னாவுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

சப்னா உண்மையை சொல்லணும்
இதில் என்ன ஒரு திருப்பம் என்றால் சப்னா யார் தன்னுடைய குழந்தைக்கு உண்மையான அப்பா என்பதை இதுவரை சொல்ல மறுத்துவருவது தான். அவர் சொன்னால் தான் உண்மை தெரியும் என்பதால் கணவன்களுடன் போலீசாரும் காத்திருக்கிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications