பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகரின் ‛ச்சீச்சீ’ செயல்.. விமானம், பஸ்சை தொடர்ந்து ரயிலிலும்.. "ஷாக்"
ரயிலில் பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகரே சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: ஓடும் ரயிலில் பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகர் வேண்டுமென்றே சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விமானத்திலும், பேருந்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று பூதாகரமான நிலையில், மேலும் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதிர வைத்த விமான சம்பவம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்பவரும் இருந்தார். ஆரம்பம் முதலாகவே மதுவை அதிகம் குடித்ததால் உச்சக்கட்ட போதையில் இருந்த அவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த பிறகும், தனது மர்ம உறுப்பை காட்டியபடி அவர் நின்று கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் திட்டியதை அடுத்து, அவர் அங்கிருந்து நகன்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

அடுத்து பேருந்தில்..
இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளாக, மற்றொரு அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் நடந்தது. கர்நாடகா மாநிலம் விஜய்புராவில் இருந்து மங்களூருக்கு கடந்த மாதம் 22-ம் தேதி அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் உள்ள ஒரு கீழ் படுக்கையில் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் பயணித்தார். அதற்கு மேலே உள்ள படுக்கையில் 32 வயதுள்ள இளைஞர் இருந்தார். பேருந்து புறப்பட தொடங்கியது முதலாக அந்த இளைஞர் மதுபோதையில் உளறிக் கொண்டு வந்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் அந்த இளைஞர் தனது இருக்கையில் படுத்திருந்தவாறே அந்த இளம்பெண் மீது சிறுநீர் கழித்தார். இதையடுத்து, அந்த இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இப்போது ரயிலில்..
இந்த சூழலில், அடுத்ததாக இதுபோன்ற கீழ்த்தரமான சம்பவம் கொல்கத்தாவில் ஓடும் ரயில் ஒன்றில் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு 'அகல் தக்த்' எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் அமிர்தசரஸை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது 10 மணியளவில் அங்கு பீகாரை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் (37) என்பவர் பயணிகளின் பயணச் சீட்டுகளை பரிசோதித்தபடி வந்து கொண்டிருந்தார். பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களை எழுப்பி டிக்கெட்டுகளை முன்னா குமார் சோதனை செய்தார்.

பெண் மீது சிறுநீர்..
இந்நிலையில், ரமேஷும், அவரது மனைவியும் பயணித்த பெட்டிக்கு முன்னா குமார் வந்த போது, அங்கிருந்த அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மின் விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. அப்போது முன்னா குமார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென ரமேஷின் மனைவி மீது சிறுநீர் கழிக்க தொடங்கினார். மேலே சிறுநீர் பட்டதும் பதறி அடித்து எழுந்த அந்தப் பெண், டிக்கெட் பரிசோதகர் தன் முன்பு நிர்வாணமாக நிற்பதை பார்த்து அதிர்ச்சியில் அலறினார். உடனே அவரது கணவரும், மற்ற பயணிகளும் எழுந்து, டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு அங்கு வந்த ரயில்வே போலீஸார் பயணிகளிடம் இருந்து முன்னா குமாரை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்தனர். அவர் உடனடியாக பணிநீக்கமும் செய்யப்பட்டார். ரயிலில் பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகரே சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications