கை, கால்களை கட்டி தூக்கி வாங்க... பாஜகவுக்கு வாக்களிக்க வைங்க... குண்டராகவே மாறி விட்ட எடியூரப்பா
கை, கால்களை கட்டி தூக்கிக் கொண்டு வந்து பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வையுங்கள் என்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா குண்டரை போல் பேசியுள்ளார்.
Recommended Video

பெலகாவி: ஓட்டு போடாதவர்களை கை, கால்களை கட்டித் தூக்கிக் கொண்டு வந்து பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வையுங்கள் என்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கர்நாடகத்தில் வரும் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 224 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பாஜக முன்னாள் முதல்வரும் தற்போதைய முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா பெலகாவியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கிட்டூர் தொகுதியின் வேட்பாளர் மஹான்டேஷ் பசவன்தராய் தொட்டாகவுடருக்கு ஆதரவாக எடியூரப்பா பிரசாரம் செய்தார்.
|
வீடுகளுக்கு செல்லுங்கள்
அப்போது அவர் கூறுகையில் தற்போது யாரும் ஓய்வு எடுக்காமல் பணியாற்றுங்கள். வரும் மே 12-ஆம் தேதி யாரேனும் வாக்களிக்க வரவில்லை என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அவர்களின் வீடுகளுக்கு செல்லுங்கள்.

மோடி குற்றச்சாட்டு
அங்கு அவர்களது கை , கால்களை கட்டி தூக்கிக் கொண்டு வந்து பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வையுங்கள் என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது. ஷிவ்மோகா தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தின்போது மோடி கூறுகையில், எடியூரப்பாவின் வயதையும் பொருட்படுத்தாமல் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் மீது தகாத வார்த்தைகளால் காங்கிரஸ் முன்வைக்கிறது.

பொறுத்துக் கொள்ள முடியாது
அவர் ஏழைகளின் வீடுகளுக்கு சென்றால் கூட அதையும் காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. இது ஏழைகளை உதாசீனப்படுத்தும் செயலாகும். இதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மோடி கூறியிருந்தார்.

பரபரப்பு
இந்நிலையில் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவே வாக்காளர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளதை காங்கிரஸ் சுட்டிக் காட்டி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications