17 நாட்கள்.. மூச்சை பிடித்துக்கொண்ட 41 உயிர்கள்.. சிக்கியது முதல் மீண்டது வரை நடந்தது என்ன?
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை நடந்தது என்ன? தேசிய பேரிடர் மீட்பு படையினர் சந்தித்த சவால்கள் என்ன?
உத்தரகாண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் கடந்த 12 ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவர்களை 16 நாட்களாக மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அவர்களுக்கு திருச்செங்கோட்டில் இருந்து அனுப்பப்பட்ட பைப்லைன் மூலம் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. ஆக்ஸிஜனும் அவர்களுக்கு அந்த வழியாகவே வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் 17ஆவது நாளாக இன்று மீட்பு பணிகள் இறுதி நிலையை அடைந்தது. சரியாக 8.30 மணி அளவில் 41 தொழிலாளர்களும் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியது முதல் அவர்கள் மீட்கப்பட்டது வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
நாள் 1: நவம்பர் 12: தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை 5.30 மணிக்கு பிரம்கல்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்த நிலச்சரிவில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கினர். இதையறிந்த பேரிடர் மீட்பு படையினர் அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன், மின்சாரம், உணவு பொருள்கள் உள்ளிட்டவைகளை காற்று அடைக்கப்பட்ட பைப்புகள் வழியாக வழங்கப்பட்டது.
நாள் 2 நவம்பர் 13: ஒரு பைப் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பத்திரமாக இருப்பதாக மகிழ்ச்சியான தகவல் கிடைத்தது. இதையடுத்து முதல்வர் தமி சம்பவ இடத்திற்கு சென்றார். இடிபாடுகளை நீக்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து புதிதாக பள்ளம் தோண்டப்பட்ட போது 30 மீட்டர் பரப்பளவில் இருந்த இடிபாடுகள் 60 மீட்டர் வரை பரவின.
நாள் 3 நவம்பர் 14: 800 மற்றும் 900 மிமீ விட்டம் கொண்ட ஸ்டீல் பைப்புகள் பொருத்தப்பட்டன. இது கிடைமட்டமாக பள்ளம் தோண்ட ஆகர் இயந்திரத்திற்கு உதவியது. இதையடுத்து சில பாறைகள் உடைந்ததால் அந்த முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள மண் சோதனைக்கு கொடுக்கப்பட்டது. சுரங்கத்தில் இருந்தவர்களுக்கு தலைவலி, வாந்தி வருவதாக கூறியதால் அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.
நாள் 4 நவம்பர் 15: முதல் துளையிடும் இயந்திரத்தின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த பேரிடர் மீட்பு குழுநவினர் அமெரிக்காவை சேரந்த இயந்திரமானது டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் வேகமெடுத்தன.
"Bharat breathes a sigh of relief as the Silkyara Tunnel rescue operation concludes successfully with the rescue of 41 workers. For the last 17 days, the entire nation was united in praying for their safe return, who displayed remarkable resilience and courage..." tweets Assam CM… pic.twitter.com/n0DLWs1bLZ
— ANI (@ANI) November 28, 2023
நாள் 5 நவம்பர் 16: அதிக செயல்திறன் கொண்ட துளையிடும் இயந்திரத்தின் பாகங்கள் அசம்பிள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. இது நள்ளிரவு முதல் பணியாற்ற தொடங்கியது.
நாள் 6, நவம்பர் 17: இரவு முழுவதும் இயந்திரத்தை வைத்து துளை போட வைத்ததில் 24 மீட்டர் அளவுக்கு துளை போடப்பட்டது. இதையடுத்து 6 மீட்டர் நீளம் கொண்ட பைப்புகள் இணைக்கப்பட்டன. இதில் 5ஆவது பைப் சேதமடைந்ததால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து மற்றொரு அதிக செயல்திறன் கொண்ட இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அன்று பிற்பகல் 2.45 மணிக்கு 5ஆவது பைப்பை பொருத்தும் பணிகள் நடந்த போது சுரங்கத்தில் மிகப் பெரிய சப்தம் கேட்டது. இதனால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த சப்தம் மீட்பு குழுவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. மீண்டும் மணல் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த குழுவில் இருந்த நிபுணர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் பைப்பை இணைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
நாள் 7, நவம்பர் 18: அதிக மின்திறன் கொண்ட அமெரிக்காவின் இயந்திரத்தின் அதிர்வுகளால் சுரங்கத்தினுள் நிலச்சரிவு ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்ததால் துளையிடும் பணி சனிக்கிழமை தொடங்கப்படவில்லை. துளையிடுவதற்கு பதிலாக மாற்று வழியை தேடுமாறு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியதை அடுத்து நிபுணர்களை கொண்டு 5 திட்டங்கள் தீட்டப்பட்டன. சுரங்கத்தின் மேல் புறத்தில் செங்குத்தாக துளையிட முடிவு செய்யப்பட்டது.
நாள் 8, நவம்பர் 19: பேரிடர் மீட்பு குழுவில் இருந்தவர்கள் 41 பேரையும் மீட்க ஒவ்வொரு யோசனைகளை கூறியதால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் மேல்பகுதியில் செங்குத்தாக தோண்டுவதற்காக ஒரே நாளில் மலை உச்சியில் சாலை அமைக்கப்பட்டது.
நாள் 9, நவம்பர் 20: மீட்பு குழுவினர் இடிபாடுகளிடையே 6 இன்ச் அகலம் கொண்ட பைப் தள்ளிவிட்டதால் இத்தனை நாளாக குறைந்த அளவிலான உணவு வழங்கப்பட்ட நிலையில் அதிக அளவிலான உணவை வழங்க வழிவகை செய்தது. அது போல் சுரங்கத்தில் இருப்பவர்களை லைவ்வாக காணவும் வழி வகை செய்தது. 4 இன்ச் பைப் இணைக்கப்பட்டு உலர் பழங்கள், மருந்துகள் கொடுக்கப்பட்டன. வேறு வகையில் பள்ளம் தோண்ட சாத்தியக் கூறுகளை ஆராய டிரோன்களும் ரோபோக்களும் கொண்டு வரப்பட்டன.
நாள் 10, நவம்பர் 21: முதல் முறையாக 41 தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகின. என்டோஸ்கோபிக் கேமரா மூலம் பெறப்பட்ட புகைப்படங்களை பார்த்தவுடன் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். எப்படியும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. நவம்பர் 20ஆம் தேதி 53 மீட்டர் இடிபாடுகளுக்கிடையே அனுப்பப்பட்ட பைப் மூலம் மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து கொண்டு வெள்ளை ஹெல்மெட்டுகள அணிந்திருந்தவர்கள் உணவு வாங்குவதும் அவர்களுக்குள் பேசிக் கொள்வதும் வெளியானது.
நாள் 11, நவம்பர் 22: மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆம்புலன்ஸ்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. ஆகர் இயந்திரம் மூலம் மாலை 6 மணி வரை 44 மீட்டர் நீளம் கொண்ட பைப் பொருத்தப்பட்டது. இது தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்காக வைக்கப்பட்டது. அவர்களுக்கு ரொட்டிகள், சப்ஜி, கிச்சடி, ஆரஞ்ச் பழங்கள், வாழைப்பழங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன.
நாள் 12, நவம்பர் 23: இடிபாடுகள் வழியே துளையிடும் போது தரை பகுதியில் விரிசல் ஏற்பட்டதால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் மீண்டும் பணிகள தொடங்கின.
நாள் 13, நவம்பர் 24: மற்றொரு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. ஆகர் இயந்திரத்தால் துளையிடும் பணியில் பிரச்சினை ஏற்பட்டதால் 25 டன் இயந்திரத்தை கொண்டு துளையிடும் பணிகள் நடந்தன.
நாள் 14, நவம்பர் 25: செல்போன்களும் விளையாட்டு அம்சங்களும் சுரங்கத்திற்கு அனுப்பப்பட்டன. இதன் மூல்ம தொழிலாளர்கள் மன உளைச்சலில் சிக்காமல் இருக்க வழிவகை செய்யப்பட்டது.
நாள் 15, நவம்பர் 26: சுரங்கத்திற்கு மேல் மலையில் துளையிடும் பணிகள் நடந்தன. முதல் நாளிலேயே 20 மீட்டர் தோண்டப்பட்டது. இதையடுத்து 700 மி.மீ. அகலம் கொண்ட பைப்புகள் மூலம் அவர்களை வெளியேற்றுவதற்கான பணிகள் நடந்தன.
நாள் 16, நவம்பர் 27: 36 மீட்டர் அளவுக்கு துளை தோண்டப்பட்டது. எலி வளைகளை தோண்டு டெக்னிக் தெரிந்த நபர்களை வைத்து துளைகள் ஏற்படுத்தப்பட்டன. வழியில் இரும்புக் கம்பிகள் போன்ற தடைகள் இருந்தால் லேசர் இயந்திரம் அல்லது பிளாஸ்மா இயந்திரங்களைக் கொண்டு அவற்றை வெட்டி அவற்றை அகற்றினர்.
நாள் 17, நவம்பர் 28: இரவு 7 மணி அளவில் அனைத்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்பு குழுவினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications