திருப்பதியில் சிறிசேன தரிசனத்துக்காக உடைக்கப்பட்ட தங்கக் கதவின் பூட்டு- பூதாகரமாகும் சர்ச்சை!
திருமலை: திருப்பதிக்கு வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வழிப்பாட்டுக்காக தங்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன, தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
சுப்ரபாதம் சிறப்பு தரிசனத்தில் நேற்று புதன்கிழமை காலை சுவாமியை தரிசனம் செய்ய சிறிசேன வந்த போது, ஏழுமலையான் கோயிலின் மூலவர் அறையின் தங்கக் கதவுகளை திறக்க கோயில் ஊழியர்கள் வந்தனர்.

எப்போதும் போல பூட்டுக்குள் சாவியை நுழைத்து திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக் கொண்டது. செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் பொறியாளரை வரவழைத்து உடனடியாக பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.
பிறகு வழக்கம் போல சுப்ரபாத சேவை துவங்கி சிறிசேன சுவாமியை தரிசனம் செய்தார். மூலவர் அறைக் கதவின் பூட்டு உடைந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம் என்று கோயில் தேவஸ்தானம் சார்பில் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை கோயில் பூட்டு உடைக்கப்பட்டதே இல்லை, இதற்கு பரிகாரம் செய்தே ஆக வேண்டும் என்று மற்றொரு தரப்பு சொல்வதால் சர்ச்சை வெடித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications