திருப்பதி கோயிலில் மொட்டை அடிப்பதற்கு காசு வசூல்... 243 பணியாளர்களை தேவஸ்தானம் நீக்கியது
திருப்பதி கோயிலில் மொட்டை அடிப்பதற்கு காசு வசூலித்ததாக 243 பணியாளர்களை தேவஸ்தானம் நீக்கிவிட்டது.
திருப்பதி: திருப்பதி கோயிலில் மொட்டை அடிப்பதற்கு பக்தர்களிடம் இருந்து காசு வசூலித்ததாக 243 சவர தொழிலாளிகளை தேவஸ்தானம் நீக்கிவிட்டது.
இந்தியாவின் பணக்கார கடவுள்களில் ஒன்று திருப்பதி வெங்காடஜலபதி ஆவார். இது லட்டுக்கு பிரசித்தி பெற்றதை காட்டிலும் மொட்டை அடிப்பது மிகவும் விஷேசம்.
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறினால் மொட்டை அடித்துக் கொள்வதாக வேண்டி கொள்வர். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவுடன் திருப்பதிக்கு வந்து மொட்டை அடித்துக் கொள்வர்.

பணம் வசூல்
மொட்டை அடிக்க தேவஸ்தானம் சார்பில் சுமார் 945 சவர தொழிலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மொட்டை அடித்தவுடன் பக்தர்களிடம் காசு பெற்றுக் கொள்வதாக தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இன்னும் சிலர் காசு கொடுக்காவிட்டால் பக்தர்களிடம் சண்டையிடுவர்.

தீவிர கண்காணிப்பு
இதனால் சவர தொழிலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்டபாடில்லை. எனவே முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் பணம் வசூலை தடுக்க தேவஸ்தானம் சார்பில் கேமராக்கள் வைத்தது. எனினும் மொட்டை அடித்தவுடன் கேமராவில் கவர் ஆகாத இடத்துக்கு பக்தர்களை அழைத்து சென்று
ஒரு மொட்டைக்கு ரூ.100 வரை வசூலித்து வந்தனர்.

தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
இதைத் தொடர்ந்து பக்தர்களிடம் பணம் வசூலித்த தொழிலாளர்களை கடுமையாக எச்சரித்தது தேவஸ்தான நிர்வாகம். பின்னர் 243 தொழிலாளர்களை நீக்கிவிட்டதாக நோட்டீஸ் அளித்தது.

ஆர்ப்பாட்டம்
இதைத் தொடர்ந்து தங்களை மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறும், பணியிலிருந்து நீக்கப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று நீக்கப்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் கண்ணீர் விட்டனர். எனினும் தேவஸ்தானம் கேட்காததால் அவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications