சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி பிரமோற்சவம் நிறைவு... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
ஏழுமலையான் கோயிலில் கடந்த 16-ம் தேதி தொடங்கிய பிரமோற்சவ விழாவில் தினமும் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளிய மலையப்பசாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முக்கிய நிகழ்ச்சிகளான கருட சேவை 20-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து நேற்று (புதன்) தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றது.
பிரமோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் வராகசாமி கோயிலில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டருளினர். அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் பிரமோற்சவ விழா கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் தொடங்கும் நவராத்திரி பிரமோற்சவம் தொடர்ந்து 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications