திருப்பதி தேவஸ்தானம் சொன்ன "வேற லெவல்" ஐடியா.. கையில் வெறும் "குச்சி" போதுமாம்.. எதுக்குன்னு பாருங்க
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பானது, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.. இதுகுறித்து அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.. அந்தவகையில், தற்போது தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலானோர் திருப்பதிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
திருப்பதியில் இருந்து மலை மீதுள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பஸ், 2 அல்லது 4 சக்கர வாகனங்கள் மூலமாக செல்வதற்கு சாலைகளும் பிரத்யேகமாக உள்ளன.. அதேபோல, படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால், எப்படியும் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.

சிறுமி உயிரிழப்பு: இப்படித்தான், கடந்த வாரம் அங்கு படிக்கட்டு வழியாக, திருமலைக்கு ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தது. அவர்களுடன், லக்ஷிதா என்ற 6-வயது சிறுமியும் நடந்து சென்று கொண்டிருந்தாள்.. ஆனால், பெற்றோரிடமிருந்து சற்று விலகி நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது, திடீரென அந்த மலைப்பகுதியிலுள்ள காடுகளில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, சிறுமியை தாக்கிவிட்டது. இதில், அந்த குழந்தை அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே செல்ல விரும்பும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது... இது தொடர்பான அறிக்கையும் வெளியிட்டிருந்தது.
அதில், "நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்கக்கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திறந்தவெளி பகுதி: திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.

இந்த அறிவிப்பானது பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது.. பக்தர்களின் கையில், கம்பு அல்லது குச்சியை தருவதால், வனவிலங்குகளிடமிருந்து தப்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
தேவஸ்தானம்: இதனிடையே, தேவஸ்தான வாரியம் மற்றொரு தகவலை வெளியிட்டுள்ளது.. திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூடினாலே போதும்.. இந்த ஆபத்துகளை தவிர்க்கலாம்.. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதிக்காக, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications