கோடிக் கணக்கில் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள்.. மாற்ற முடியாமல் கஷ்டப்படும் திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இன்னும் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் கோடிக் கணக்கில் இருப்பதாக, அக்கோவிலின் தேவஸ்தான போர்ட் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இன்னும் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் கோடிக் கணக்கில் இருப்பதாக, அக்கோவிலின் தேவஸ்தான போர்ட் தெரிவித்து இருக்கிறது.
சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இப்போது வரை கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை. 2 சதவிகித நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கியிடம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

எவ்வளவு
தற்போது திருப்பதி தேவஸ்தானத்திடம் 25-30 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறது. இதில் 1000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இதை முழுமையாக கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எவ்வளவு பணம் முழுமையாக இருக்கிறது என்று சில நாட்களுக்குள் தெரியவரும்.

எப்படி இவ்வளவு பணம்
திருப்பதி கோவிலில் இவ்வளவு பணம் வந்ததற்கு பின் சுவாரசியமான காரணம் இருக்கிறது. பண மதிப்பிழப்பின் போது கோவில் நிர்வாகம் கோடிக்கணக்கில் பணத்தை மாற்றியது. ஆனால், அதற்கு பின்பும் கூட நிறைய பக்தர்கள், பழைய ரூபாய் நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் கோவில் உண்டியலில் போட்டுள்ளார்கள்.

கணக்கு பார்க்க நேரம் ஆகிவிட்டது
இவ்வளவு நாட்கள் பழைய ரூபாய் நோட்டுகள் கைவசம் இல்லை என்று திருப்பதி தேவஸ்தானம் நினைத்துக் கொண்டு இருந்தது. நேற்றைய கணக்கின் போதே இவ்வளவு பழைய நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இன்னும் நிறைய பழைய நோட்டுகள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

கோரிக்கை
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும்படி தற்போது திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி இதற்காக பலமுறை பழைய நோட்டுகளை திருப்பி அளிக்கும்படி கோரிக்கை வைத்தது. ஆனால் தற்போதுதான் திருப்பதி தேவஸ்தானம் பழைய நோட்டுகளை கொடுக்க விரும்புவதால், ரிசர்வ் வங்கி அதை ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியவில்லை.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications