பெங்களூரு குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தமிழக, ஆந்திர போலீஸ் படையினர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்கரளூரு சர்ச் சாலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்து வந்த போலீஸ் படையினர் கூட்டாக ஆய்வு நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் இந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

TN, AP police teams visit Bangaluru blast site

பெங்களூரு சர்ச் சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்த 37 வயதுப் பெண் பவானி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீஸார் தவிர தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரணையில் இறங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிமி அமைப்பைச் சேர்ந்த சிலர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக சிமி அமைப்பைச் சேர்ந்த ஷேக் மஹமூத் என்பவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இவர் மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா சிறையிலிருந்து தப்பிய சிமி அமைப்பைச் சேர்ந்த சிலரில் ஒருவர் ஆவார்.

மேலும் அல் உம்மா அமைப்பு மீதும் சந்தேகம் வலுத்துள்ளதால் தமிழகத்திற்கு தனிப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் ஆந்திர மாநிலம் குப்பத்திற்கும் ஒரு தனிப்படை விரைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த தனிப்படையினர் பெங்களூரு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+