மும்பையில் பயங்கரம்.. தர்மபுரியைச் சேர்ந்தவர் கடத்திக் கொலை: 20 இடங்களில் கத்திக்குத்து
மும்பை: மும்பையில் தமிழர் ஒருவர் 20 இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வில்லேபார்லேயில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் குடிசைப்பகுதி நேரு நகர். அங்குள்ள சராசராம் தெருவில் வசித்து வரும் ராமன் என்பவரின் மகன் மாரியப்பன்(எ) மாரி(38). தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டைச் சேர்ந்த மாரிக்கும், உமா மகேஷ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
மாரி தனது குடும்பத்துடன் சனிக்கிழமை மாலை டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது செல்போனில் யாரோ அவரை அழைத்துள்ளனர். எடுத்து பேசிய அவர் வெளியே சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாலை 5.30 மணிக்கு நேரு நகரில் உள்ள பள்ளி அருகே கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் மாரியின் உடலை கீழே தள்ளிவிட்டு சென்றார்கள். மாரியின் உடலில் 20 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் கூறுகையில்,
மாரி மீது ஜுஹு காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. முதல் கட்ட விசாரணையில் மாரி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. என்றார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications