சோனியாவுடன் ப.சிதம்பரம், தங்கபாலு உட்பட 12 பேர் சந்திப்பு- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது சரமாரி புகார்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட 12 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட போது இனி காங்கிரஸில் கோஷ்டி பூசலே இருக்காது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் 12க்கும் மேற்பட்ட கோஷ்டிகள் காங்கிரஸில் விஸ்வரூபமெடுத்துள்ளன.

இந்த 12 கோஷ்டி தலைவர்களில் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தங்கபாலு, டாக்டர் செல்லக் குமார் ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் அண்மையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் இக்குழுவினர் இன்று சந்தித்து இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று சோனியாவிடம் வலியுறுத்தினோம். இளங்கோவன், காங்கிரஸ் தலைவர்களை அரவணைத்துச் செல்வதில்லை. தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும் சோனியாவுடன் ஆலோசித்தோம் என்றார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications