23வது நாளாக தொடரும் விவசாயிகள் வேதனை.. டெல்லியில் முக்காடு போட்டு தரையில் உருண்டு போராட்டம்!
டெல்லியில் 23வது நாளாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தலையில் முக்காடு போட்டும் கை கால்களை கட்டிக் கொண்டு தரையில் உருண்டு பெரண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லியில் 23ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதற்கும் பதில் சொல்லாத பாஜக அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 23 நாட்களாக நடுரோட்டில் வெயிலில் அமர்ந்து தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரை மொட்டை
ஆட்சியாளர்களை கவரும் வகையில் நூதனப் போராட்டங்களை ஒவ்வொரு நாளும் நடத்தி வரும் விவசாயிகள் தலை முடியை பாதியாக வழித்து ‘அடை மொட்டை' போராட்டத்தை விவசாயிகள் நடத்தினார்கள்.

பாதி மீசை
என்ன செய்தும், மத்திய அரசு தங்களை கண்டு கொள்ளாததால் நேற்று விவசாயிகள் அரை மீசையை வழித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய, மாநில அரசுகள் தங்களை சந்திக்க வேண்டும் என்று அப்போது விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தலை கீழாய்…
அதே போன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் நேற்று தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. என்றாலும் ஆளும் பாஜக அரசின் ஓரக் கண் கூட விவசாயிகளின் மேல் படவில்லை.

முக்காடு போட்டு
இந்நிலையில், 23வது நாளான இன்று விவசாயிகள் அனைவரும் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது கூறிய போராட்டத் தலைவர் அய்யாகண்ணு " எங்களை இந்த அரசு முக்காடு போட வைத்துவிட்டது. நாங்களும் எத்தனையோ வகையில் போராட்டம் நடத்தினோம். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் முக்காடு போட்டு போராட்டம் நடத்துகிறோம்" என்று கூறினார்.

மோடிக்கு புத்தி கொடு
முக்காடு போராட்டத்தின் ஊடாகவே, கை கால்களை கயிறால் கட்டி தரையில் உருண்டு நூதனப் போராட்டத்தில் இன்று தமிழக விவசாயிகள் ஈடுபட்டனர். கடவுளே மோடிக்கு புத்தியைக் கொடு என்று கேட்டுதான் அங்கபிரதட்சனம் செய்து போராடி வருகிறோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications