பாடகர் கோவன் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்!
டெல்லி: மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இடதுசாரி அமைப்பான ம.க.இ.க.வைச் சேர்ந்த பாடகர் கோவன் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாடியலில் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஜாமீன் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே கோவனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையின் போது போலீசாரால் கோவன் மீதான தேசதுரோக வழக்கு ஏன் என்பதை விவரிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் கோரிக்கையை நிராகரித்து கோவனுக்கு ஜாமீன் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கோவன் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் கோவனுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் கோவனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications