வாக்குமூலம் திருத்தம்- ராஜிவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தமிழக வழக்கறிஞர்கள் மனு!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. புதிதாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நேற்று சி.பி.ஐ. இயக்குநரிடம் மனு அளித்தனர்.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் திருத்தம் செய்தேன் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் பேட்டி அளித்திருந்தார். பேரறிவாளனிடம் தாம் வாக்குமூலம் பெற்றபோது, பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்று தான் பேரறிவாளன் கூறினார். அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல் சதி திட்டம் அரங்கேறியதாகத்தான் இதில் அர்த்தம் கொள்ளப்படும் என்று தியாகராஜன் பேட்டிகளில் கூறியிருந்தார்.
சி.பி.ஐ. முன்னாள் எஸ்.பி.தியாகராஜன் தெரிவித்திருக்கும் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ராஜாராமன் மற்றும் எம்.துரைசெல்வன் ஆகியோர் மனு ஒன்றை டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.
அதில், முன்னாள் சி.பி.ஐ. எஸ்.பி.தியாகராஜன் அளித்துள்ள பேட்டியின் அடிப்படையில் ராஜிவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, முன்னாள் சி.பி.ஐ. எஸ்.பி.தியாகராஜன் தெரிவித்த தகவல் அடிப்படையில் ராஜிவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். எஸ்.பி.தியாகராஜனை வரவழைத்து அவர் அளித்த வாக்குமூலத்தை சரிபார்த்து அதன் கூடுதல் விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்/ இல்லையென்றால் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகளை சந்தித்து முறையிட்டோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications