அமேதியில் ராஜீவ் வலது கரம்!முடிவுக்கு வந்த 25 வருட குடும்ப அரசியல்? ராகுல் வெற்றி உறுதி..ஷ்யாம் தகவல்
சென்னை: சோனியா காந்தியின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இது பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துள்ளது.
பலரும் எதிர்பார்த்ததைப் போலவே ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டுவிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை உலகமே அறியும். அதாவது சோனியா காந்தி 2004 தொடங்கி 2019 வரை இந்தத் தொகுதியின் எம்பியாக இருந்துள்ளார்.

இதே தொகுதியில் 1996 மற்றும் 1998இல் நடைபெற்ற தேர்தலில் மட்டும் பாஜக வேட்பாளர் அசோக் சிங் வெற்றி பெற்றார். அது வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின் காலகட்டம். அப்போது தனது இறுக்கமான பிடியைக் காங்கிரஸ் இழந்திருந்தது.
அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து களம் காண்பார் ராகுல் என எதிர்பார்க்கப்பட்டு வந்தபோது அவருக்குப் பதிலாக கிஷோரி லால் சர்மாவைக் களம் இறங்கி உள்ளது காங்கிரஸ். இவர் காந்தி குடும்பத்தின் விசுவாசி.
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்குக் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்தவர். ஆகவே, பல நுணுக்கங்களை அறிந்தவர்.

இதற்கு எல்லாம் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் வலது கரமாகச் செயல்பட்டவர். அவரது மறைவுக்குப் பின்னர் சோனியா குடும்பத்தில் செல்வாக்குள்ள மனிதராக மாறினார் சர்மா.
கடந்த 25 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா குடும்பமே இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வந்தது. முதன்முறையாகக் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.
அமேதி கை மாறியது பற்றியும் ராகுல் காந்தி ரேபரேலியில் நிற்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
"ரேபரேலி தொகுதி என்பது ஃபெரோஸ் காந்தி போட்டியிட்ட தொகுதி. இவர் இந்திரா காந்தியின் கணவர். ராகுல்காந்தியின் தாத்தா. அதன் பிறகு அதே தொகுதியில் இந்திராகாந்தி நின்றார்.
இதே ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியை ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு ராஜ் நாராயணன் தோற்கடித்தார். நெருக்கடி நிலை முடிந்து பிறகு வெற்றி பெற்றார்.
அதன் தொடர்ச்சியாகச் சோனியா காந்தி தொடர்ந்து இந்தத் தொகுதியில் போட்டியிட்டு பலமுறை வெற்றி பெற்றார். அதிகபட்ச ஓட்டுக்களை அவர் பெற்றார். 70% வாக்குகள்வரை அவர் பெற்றார். அவர்தான் அதிகபட்ச ஓட்டுக்களை வாங்கியவர்.
அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவதைவிட ரேபரேலியில் போட்டியிடுவதுதான் பொருத்தமானது. சோனியா காந்தி தேர்தலில் நிற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை.
ஆகவே, அவரது தாய் நின்ற ரேபரேலியில் ராகுல் போட்டியிடுவதுதான் முறை. அமேதியைவிட இது நல்ல முடிவுதான்” என்று கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியையும் ராகுல்காந்தியையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு சில பொய்யான தகவல்களைப் பிரதமர் மோடி பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
உண்மையில் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? ஓட்டு ஜிகாந்த் என மோடி சொல்வது உண்மையா? என்ற கேள்விக்கும் ஷ்யாம் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
இது குறித்து அவர், “மோடி அளவுக்குப் பொய்யான தகவல்களைப் பரப்பிய பிரதமர் வேறு யாருமே இல்லை. அந்தளவுக்குத் தவறான தகவல்களைக் கூறி வருகிறார். குறிப்பாக முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின் அவரது பிரச்சாரம் படு மோசமாகப் போய்விட்டது.
இன்னும் 4 ஆம் கட்டம் 5 ஆம் கட்ட தேர்தலின் போது அவர் எப்படி எல்லாம் பேசப் போகிறார் என நினைத்தால் பயமாக உள்ளது” என்றவர் பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், “பாகிஸ்தானில் உள்ள யாரோ ஒருவர் ராகுல்காந்தியின் கேரள தேர்தல் பிரச்சார வீடியோவை ஷேர் செய்திருந்தார். அவர் ஒரு நெருப்பு என்று அதில் கூறியிருந்தார். அதை வைத்துத்தான் மோடி தாக்கி பேசியுள்ளார்.
ஆனால், பாகிஸ்தானைப் பந்தாடியவர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைவர்கள்தான். லால்பகதூர் சாஸ்திரி, பாகிஸ்தானுக்கு உள்ளேயே சென்று குண்டு மழை பொழிந்தார். பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறியதற்காக அப்படி ஒரு பதிலடியைக் கொடுத்தார் அவர்.
அதன் பின்னதாக பாகிஸ்தானைப் பந்தாடியவர் இந்திராகாந்தி. பங்களாதேஷ் யுத்தத்தின் போது அவர் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினார். இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தானையே இரண்டாக உடைத்து விடுதலை வாங்கிக் கொடுத்தார் இந்திராகாந்தி.
அப்படி அடிவாங்கிய பாகிஸ்தான் எப்படி காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை மோடிதான் விளக்க வேண்டும் பாகிஸ்தான் அரசியல் என்பதே காங்கிரஸ் எதிர்ப்புதான். ஏனென்றால் அவர்களின் நாடு அதிக பாதிப்புகளைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சியின் 2 பிரதமர்களால்தான்.
இப்படிப் பல ஆண்டுகளாகப் பாகிஸ்தானை இந்தியா பகை நாடாகவேதான் கருதி வந்தது.
அதை மாற்றியவர் பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தான். அவர்தான் பாகிஸ்தானுக்கு பஸ் பயணம் விட்டார். லாகூருக்கு பஸ் விட்டவர் பாஜக ஆட்சிதான். பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் காட்டியது பாஜக ஆட்சிதான்.
பாகிஸ்தான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது என மோடி பேசுவது கட்டுக்கதை. வரலாற்று அப்படி இல்லை” என்கிறார்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications