மின்துறை அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்த 'நத்தம்'.. மேயர் தேர்தலில் ரொம்ப பிஸி!!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டை தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது மின் தேவை என்பது 13,500 மெகாவாட் அளவாக உள்ளது. அடுத்த ஆண்டில் இது 14,500 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எண்ணூர்; உடன்குடி; உப்பூர் ஆகிய இடங்களில், புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்ததால் தமிழக மின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

மின் திட்டங்கள் முடக்கம்
இதனால் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே முடங்கின. மேலும் தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு, மின் வழித்தடம், மத்திய மின் நிலையங்களில் கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு போன்றவற்றிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

மோடி அரசுடன் நல்லுறவு
இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். புதிதாக அமைந்த மத்திய அரசுடன் சுமூக உறவை மேற்கொள்ளும் வகையில் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

டெல்லி மாநாடு
இந்நிலையில் டெல்லியில் மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி, மின் வாரிய தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.

நத்தம் புறக்கணிப்பு
ஆனால் திடீரென மின் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்க வில்லை.

தூத்துக்குடி தேர்தல்..
இதற்கு காரணம் உள்ளாட்சி இடைத்தேர்தலில் தூத்துக்குடி மேயர் தேர்தல் பொறுப்பாளராக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இருக்கிறார். இதனால்தான் அவர் பங்கேற்கவில்லையாம். அதாவது தமிழக மின் திட்டங்களை விட தூத்துக்குடி மேயர் தேர்தல்தான் முக்கியம் என்று நத்தம் கருதிவிட்டதாலேயே அவர் பங்கேற்கவில்லையாம். இந்த செய்தி பொதுமக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications