காவிரியில் இருந்து 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
டெல்லி: காவிரியில் இருந்து 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா உடனே திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றம் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகா உரிய காலத்தில் திறந்துவிடுவதில்லை. இதனால் முப்போகம் விளைவிக்கப்பட்ட காவிரி டெல்டா பாசனப்பகுதியில் ஒருபோக சாகுபடியே பெரும் கேள்விக்குறியாகி வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் போதுமான மழை இல்லாத காரணத்தால் வியாழக்கிழமையன்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் அடியாக அதிகரிக்கப்பட்டது. அப்போது அணையின் நீர் இருப்பு 31.57 டி.எம்.சிதான் இருந்தது.
இதனையடுத்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை தரவேண்டிய 45.டி.எம்.சி. நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications