நெல்லை முருகனைத் தொடர்ந்து கேரளாவில் மற்றொரு தமிழருக்கு சிகிச்சை தர மறுப்பு
கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை தர மருத்துவமனைகள் மீண்டும் மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர்: கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க அம்மாநில மருத்துவமனைகள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிகவும ஆபத்தான நிலையில் எடுத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து ராஜேந்திரனின் உறவினர்கள் அங்கிருந்து அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் தற்போது கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் கேரளாவில் விபத்தில் சிக்கினார்.
அவரை சிகிச்சைக்காக கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்திருந்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த நோயாளிக்கு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தது குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தையும் அம் மாநில அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications