குட்கா வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு
குட்கா விற்பனை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: குட்கா விற்பனை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும் குட்கா பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விற்பனைக்கு பின்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கூறி கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
ஆனால் சிபிஐ விசாரணைக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணை முடிந்து மேலும், இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை இன்று நடந்தது.
தற்போது இந்த குட்கா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த அமர்வில் சிபிஐ விசாரணை குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications