7 தமிழர் விடுதலை; தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் எதிர்ப்பு
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் கருத்தும் கேட்டுள்ளது. அதே நேரத்தில் 3 நாட்களுக்குள் மத்திய அரசு கருத்து தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் தமிழக அரசு தமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், தீவிரவாதத்துக்கு எதிராக எந்த ஒரு அரசும், அரசியல் கட்சியும் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது. ராஜிவ் படுகொலை என்பது நாட்டின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
7 பேரை விடுதலை செய்வது என்பது நீதித்துறையின் அனைத்து மாண்புகளுக்கும் முரணானது.7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்.
7 தமிழரை விடுதலை செய்ய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் 7 தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications