மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு ஒரு பாதிப்பும் இல்லை: கர்நாடக முதல்வர்
டெல்லி: மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில் எந்த பாதிப்பும் இருக்காது என்று கார்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட துடிக்கிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் 10 அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று டெல்லி சென்று மோடியை சந்தித்து மேகதாது விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர்.
மோடியை சந்தித்த பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து பிரதமரை சந்தித்தோம். எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எங்கள் பகுதியில் தான் அணை கட்ட உள்ளோம். இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
தமிழகத்திற்கு தேவையான 192 டிஎம்சி நீரை அளித்த பிறகு உள்ள நீரை மட்டுமே மேகதாதுவில் தேக்கி பயன்படுத்தப்படும். நாங்கள் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது ஆகும் என்றார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications