மோடியோடு கை குலுக்குவதா... நாகூர் தர்கா நிர்வாகிக்கு எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நாகூர்: கேரளா வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோடு கை குழுக்கியதற்காக நாகூர் தர்கா நிர்வாகி மஸ்தான் சாஹிப்புக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
கேரளாவில் மாதா அமிர்தானந்தா மயி பிறந்த நாளை முன்னிட்டு, மத நல்லிணக்க விழா செப்டம்பர் 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது, நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டிகளில் ஒருவரான மஸ்தான் சாஹிப் கலந்து கொண்டு நரேந்திர மோடியோடு கை குலுக்கியதாக கூறப்படுகிறது.
இது நாகூரில் தற்போது அவருக்கு எதிராக கிளம்பியுள்ளது. தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மஸ்தானுக்குக் கண்டனம் தெரிவித்து நாகூரில் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications